வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வெற்று தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், அவற்றுக்கு எப்படி நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது; தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வாக்குறுதிகள் ஏற்படுத்தும் நிதி தாக்கங்கள் மற்றும் அதற்கு நிதி அளிப்பதற்கான வழிமுறைகளை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
எந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ, அதன் மூலம் மட்டுமே வாக்காளர்களின் நம்பிக்கையை பெற முடியும். வெற்று வாக்குறுதிகள் எதிர்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்குவது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட உரிமை என்ற கருத்தை கொள்கை ரீதியாக தேர்தல் கமிஷன் ஏற்று கொள்கிறது. அதேநேரத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதிலும் சமநிலையை நிலைநாட்டுவதிலும் சில வாக்குறுதிகள் மற்றும் சலுகைகள் விரும்பத்தகாத தாக்கத்தை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை நியாயப்படுத்த தேர்தல் நடத்தை விதிகள் தேவை என்றாலும், தங்களது வாக்குறுதிகளுக்கு எப்படி நிதி அளிக்க போகிறார்கள் என்பதை விரிவாக விளக்க வேண்டும்.
இந்த கடிதத்திற்கு அரசியல் கட்சிகள் பதில் சொல்லவில்லை என்றால், இந்த விஷயத்தில் அந்த கட்சிகள் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றே கருத முடியும். இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்த கடிதத்திற்கு வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் கேட்டு கொண்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement