இலங்கையின் பிரிவெனாக் கல்வியை மேம்படுத்த சிங்கப்பூரின் ஸ்ரீலங்காராம நன்கொடை.

சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம பௌத்த விகாரையின் அனுசரணையில் இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பிரிவெனாக்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள நன்கொடையாளர்களின் உதவிகளுடன் இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பிரிவெனாக்களில் கல்வி கற்கும் தேரர் மற்றும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட பிரிவெனாக்களுக்கு கல்வி உபகரணங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளன.
சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளராக செயற்பட்டபோது, இந்நாட்டில் உள்ள பிரிவெனாக்களுக்கு உதவிகளை வழங்க சந்தர்ப்பம் வழங்குமாறு சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீலங்காராம பௌத்த விகாரை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இன்று இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம பௌத்த விகாரையின் விகாராதிபதி வண. கரதெடியான குணரதன தேரர், வண. மகாமேவ்னாவே மங்கள தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர். அத்துடன் சிங்கப்பூர் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனெக ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சுரேன் படகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.