சர்க்கரை நோய் என்பது ஒரு சமயத்தில் வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்ற நிலையில் இருந்து மாறி தற்போது இளம் வயதினர் பலரும் பாதிப்படைகின்றனர்.
சர்க்கரை நோய்க்கான மருந்தை நிறுத்திவிட்டால் பலருக்கும் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்படும்.
அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக குணப்படுத்திவிட முடியும் என்று பலரும் கூறுகின்றனர். அப்படி சர்க்கரை வியாதி முழுவதுமாக குணப்படுத்த சில எளிய இயற்கை பொருட்கள் உண்டு.
பாகற்காய்
பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பட்டை
பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், ரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்.
boldsky
நாவல் பழம்
நாவல் பழங்கள் மற்றும் அதனுடைய கொட்டைகளுக்கும் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தக்கூடிய அபரிமிதமான சக்திகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெரிதளவு குறைத்து, சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வெந்தயம்
வெந்தயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பீன்ஸ் வகைகள்
பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.
இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
நட்ஸ்
நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு இதய ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.
news18