சைபர் குற்றyத்தை தடுக்க வெளிநாட்டு போலீசுடன் இணைந்து சிபிஐ அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க ‘ஆப்ரேஷன் சக்ரா’ என்ற பெயரில் 18 மாநிலங்களில் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. போலி கால்சென்டர் மூலமாக இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக ‘ஆப்ரேஷன் சக்ரா’ என்ற பெயரில் சிபிஐ நேற்று (அக்.,4) முதல் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் தலைமையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலிய போலீசார் இணைந்து 18 மாநிலங்களில் 105 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

latest tamil news

இதுவரை 87 இடங்களில் சோதனை நிறைவுப் பெற்றதாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4 இடங்களும், டில்லியில் 5 இடங்களும், சண்டிகரில் 3 இடங்களும், பஞ்சாப், கர்நாடகா, அசாம் மாவட்டங்களில் தலா 2 இடங்களும் என இன்னும் 18 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.