மின்னணு சாதனங்களுக்கு USB Type-C சார்ஜர்; ஐரோப்பிய நாடாளுமன்றம் இயற்றிய புதிய சட்டம்!

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்திற்கும் பொதுவாக டைப்-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் , மின்னணு சாதன உற்பத்தியாளர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், டைப்-C சார்ஜரைத் தவிர மற்ற சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கு பொதுவாக யூஎஸ்பி டைப்-C சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-C சார்ஜை பயன்படுத்த சொல்வதற்கானக் காரணம் மின் கழிவு சிக்கலுக்கு தீர்வு காணுவதற்குதான் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தெரிவிக்கிறது.

யூஎஸ்பி டைப்-C சார்ஜர்

மேலும் இதன் மூலம் மக்கள் புதிய மின் சாதனங்கள் வாங்கும்போது அவர்களது பழைய சாதனத்தின் சார்ஜரைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவாகியுள்ளது. 8 உறுப்பினர்கள் இச்சட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளனர். இந்த வகையான சார்ஜர்கள் ஒரு முறை பயன்படுத்திய பின் அதனை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வழிவகுக்கும் என்றும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட்டை உருவாக்க பல நாடுகள் விரும்புகிறது. சமீபத்தில் ஒயர்லெஸ் ரெகுலேட்டர் உடைய சாதனங்களுக்கு யூஎஸ்பி டைப்-C சார்ஜை பயன்படுத்த பிரேசில் அரசும் கூட பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.