ராம்லீலா விழாவில் ஆபாச நடனம்… பொங்கி எழுந்த உத்தரப் பிரதேச போலீஸ்!

நவராத்திரியின் விஜய தசமி தினத்தன்று வட மாநிலங்களில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெறும். ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகளை ராமர் அம்பால் வதம் செய்து எரிக்கும் நிகழ்வே ராம்லீலா. இந்த  ராமாயண கதையை நாடகமாகவும் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்துவார்கள். இந்தாண்டும் ராம்லீலா விழாக்கள் பல்வேறு இடங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. 

அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்வு தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அங்கு ராம்லீலா நாடகத்தின் மேடையில், ஆபாசமான வகையில் சில நடனக் கலைஞர்கள் ஆபாசமான வகையில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், ராவணனாக வேடமிட்டவர் மேடையில் அமர்ந்திருக்க அவரை நோக்கி அந்த நடனக் கலைஞர்கள் ஆபாசமான வகையில், நடனமாடி அவர் எள்ளி நகையாடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீது சம்பல் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி, ஆபாச நடனமாடிய சில கலைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பொதுவெளிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சம்பல் மாவட்டத்தின் பன்வாசா கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவில், கலைஞர்கள் ஆபாசமாக நடனமாடும்போது, கீழே இருந்த பார்வையாளர்கள் ஆரவாரமாக கூச்சலிட்ட சத்தங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் காணமுடிகிறது. ராம்லீலா விழாக்களின்போது, இதுபோன்ற ஆபாச நடனங்கள் நடப்பது உத்தரப் பிரதேசத்தில் வாடிக்கையாகிவிட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன், உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் நகரிலும், நடனக் கலைஞர்கள் மேடையில் ராவணன் வேடமிட்டவரை நகையாடும் காட்சிகளும் இணையத்தில் வைராலகியது. மற்றொரு ராம்லீலா நிகழ்ச்சியில், ராமர், சீதை வேடமிட்டிருந்தவர்கள் மேடையில் இருந்தபோதே, இதுபோன்று ஆபாச நடனமாடிய சிலர், வயதானவர்களை தங்களுடன் ஆடுமாறு மேடையேற்றி காட்சிகளும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.