அசலைவிட 4,000 மடங்கு; மலைக்கவைத்த பீங்கான் குவளை ஏலம்!

ஏலத்தில் பொதுவாகவே புதுப்புது பொருள்களைக் காட்டிலும், பழைமையான மற்றும் வரலாற்றில் அரிதாக விளம்பரப்படுத்தப்படும் பொருள்களுக்கு எப்போதும் மக்களிடையே அதை வாங்கவேண்டுமென்ற ஆர்வமிருக்கும். அத்தகைய சிறப்புவாய்ந்த பொருள்கள் ஏலத்துக்கு வரும்போது, அதன் உண்மை விலையைவிட எதிர்பாராத அளவுக்கு பல மடங்கு அதிக விலைக்கு ஏலம் போகும். சில நேரங்களில், சாதாரண பொருள்களை அரியவகை பொருள்கள் என எண்ணி ஏலத்தில் வாங்கப்படுவதுமுண்டு. அதுபோலத்தான் பாரிஸில் நடந்த ஓர் ஏலத்தில் சாதாரண சீனப் பீங்கான் குவளை ஒன்று அதன் அசல் விலையைவிட 4,000 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

ஏலம்

முதலில் இந்த டியான்கியுப்பிங் பாணி(tianqiuping-style) பீங்கான் குவளையை பிரெஞ்சு நாட்டில் வசிக்கும் பெண்ணால் ஏலத்தில் விடப்பட்டது. இந்தப் பெண்ணின் தாயாரால், இவருக்கு விட்டுச்செல்லப்பட்டாகக் கூறப்படுகிறது. ஆனால், 54 செ.மீ உயரமுள்ள இந்த பீங்கான் குவளையை அந்தப் பெண் பார்த்ததேயில்லையாம். அதனால் இவர், பிரிட்டானியிலுள்ள(Brittany) தன்னுடைய தாய்வீட்டிலிருந்து பாரிஸுக்கு ஏல நிறுவனமான ஒசெனட்(Osenat) மூலம் விற்க ஏற்பாடு செய்தார். அதோடு, இந்தக் குவளை முதலில் பாரிஸின் கலெக்டரான தன்னுடைய பாட்டிக்குச் சொந்தமானது என்று ஏல நிபுணரிடம் அவர் கூறினார். அதையடுத்து, ஒசெனட்டும் தனது இணையதள பக்கத்தில், “குளோபுலர் உடல்(globular body), நீண்ட உருளை கழுத்து(cylindrical neck) மற்றும் பாலிக்ரோம் எனாமல்(polychrome enamel) குவளை, நீல-வெள்ளை பாணியில், ஒன்பது டிராகன்கள் மற்றும் மேகங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சீனப் பீங்கான் குவளை

அதன் பின்னர் இந்தப் பொருளுக்கான ஏலத்தில் 30 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஏலத்தில், 2,000 யூரோ மதிப்புடைய இந்தக் குவளை, 7.7 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. இது கிட்டத்தட்டக் குவளையின் உண்மை விலையைவிட 4,000 மடங்கு அதிகம். தற்போது, விற்பனையாளரின் தொகையுடன் அந்தக் குவளையின் மொத்த விலை 9.12 மில்லியன் யூரோ என்று கூறப்படுகிறது.

சீனப் பீங்கான் குவளை

இது குறித்து ஒசெனட்டின் இயக்குநர் Cédric Laborde, “பட்டியல் வெளியிடப்பட்ட தருணத்திலிருந்து, குவளையைப் பார்க்க அதிகமான சீன மக்கள் வருவதை நாங்கள் பார்த்தோம். இதனை வாங்குயவர் ஒரு சீனர். சீனர்கள் தங்களுடைய வரலாற்றில் மிகவும் ஆர்வமாக இருப்பதுடன், தங்களின் வரலாற்றைக் கைப்பற்றுவதில் பெருமிதம் கொள்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.