பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேகர தலைமையில் நேற்று (04) நடைபெற்றபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக பெற்றோலிய இறக்குமதி, வழங்கல் மற்றும் விநியோகம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு மேலதிகமான தரப்பினருக்கு இடமளிக்கப்படும்.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வி.சானக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாளக பண்டார கோட்டேகொட, கௌரவ எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.