ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் “1 வருட சம்பளத்தை விட அதிகம் '' அசத்தும் பிரபலங்கள்!

மக்கள் பலரும் வலைதளங்களில் கண்டபடி விமர்சித்து, போஸ்ட் போட்டு திட்டுவாங்கும் நிலையில் இருக்கும்போது, சமூகவலைதளத்தில் ஒரு போஸ்ட்டுக்கு  பிரபலங்கள் பல கோடிகள் பணம் வாங்குகிறார்கள் என்ற செய்தி கேட்க  வியப்பாகத்தான் இருக்கும்.

சர்வதேச அளவில் சிறந்த இந்திய கிரிக்கெட்  வீரர்களில் ஒருவர் விராட் கோலி. கிரிக்கெட்டை தாண்டி மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அதற்கு கரணம் அவரது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, ஃபிட்னெஸான உடம்பு, சுறுசுறுப்பு ஆகும்.

விராட் கோலி

சமூக வலைதளங்களில் இவரை கோடிக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 200,703,170 –க்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். சமூக வலைதளங்களில் இவரது பதிவுகள் அதிகம் வைரல் ஆகும். இன்ஸ்டாகிராமில் அவர் போட்டோ ஒன்றை போஸ்ட் செய்தால் அதற்கு லட்சக்கணக்கான லைக்கும், ஆயிரக்கணக்கான ஷேரும் கிடைக்கிறது. கடந்த மாதங்களில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் இட்ட ஒரு பதிவின் மூலம் ரூ.8.7 கோடி வருவாயை ஈட்டியுள்ளார்.

விராட் கோலி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவர் பதிவிடும் ஒரு போஸ்ட் மூலம் கூட இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஹோப்பர் எச்கியூ.காம் என்ற இணையதளப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் நட்சத்திரங்களின் ஃபாலோயர்கள், பதிவுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட்டை வைத்து  எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற விவரங்களை ஆண்டுதோறும் இப்படி வெளியிடுவது வழக்கம்.

விராட் கோலி

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்களிடம், தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய வியாபார நிறுவனங்கள் இந்தத் தொகையை வழங்குகின்றன.

விராட் கோலிக்கு பிசிசிஐ -யின் ஓராண்டு ஒப்பந்த ஊதியம் ரூ.7 கோடி உள்ளநிலையில், அதைவிட அதிகமாக ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மூலம் சம்பாதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் அமெரிக்காவின் மாடன் அழகியும், செய்தி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னர், செலீனா கோமேஸு, கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, ஹாலிவுட் நடிகர் ட்வெய்னி ஜான்சன், ப்ரியங்கா சோப்ரா, கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.