முன்னாள் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தது, சட்ட விரோதமாக பின்தொடர்ந்தது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்ளுக்காக டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜஸ்மீட் சிங் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அந்த குற்றஞ்சாட்டப்பட்டவரும், வழக்கு தொடர்ந்து பெண்ணும், கணவன்-மனைவி என்றும் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கை அவர் திருமண தகராறால் விளைந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும், முன்னதாகவே, இந்த தங்களின் முழு மனதோடு இந்த பிரச்சனையில் சமாதானமாக போவதாக இரு தரப்பும் அறிவித்தது. மேலும், அந்த வழக்கை ரத்து செய்ய தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த முன்னாள் மனைவியும் உறுதியளித்தார்.
இதனால், இந்த வழக்கை ரத்து செய்தது மட்டுமின்றி, தீர்ப்பில் சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார். அதாவது,’இந்த வழக்கு 2020ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு, நீதிமன்றத்தின் நேரத்தையும், போலீசாரின் நேரத்தையும் வீணடித்துள்ளது. இந்த நேரத்தை உபயோகமான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். அதனால், மனுதாரர் சமுதாயத்திற்கு உதவும் வகையில் எதாவது நல்லது செய்ய வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, டெல்லியின் நொய்டாவில் இரண்டு பர்கர் கடை வைத்து நடத்திவரும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், இரண்டு ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு (குறைந்தபட்சம் 100 பேருக்கு) நல்ல சுத்தமான இடத்தில் வைத்து தயாரான பர்கர்களை வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் முன்னாள் மனைவிக்கு ரூ. 4.5 லட்சத்தையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.