மின் மானியத் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல்; ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டும் பாஜக!

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு, மின்சார விநியோகம் மற்றும் மின்சார மானியத்தில் ஊழல் செய்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் ராஜ்ய சபா எம்.பி-யும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதன்ஷு திரிவேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தனியார் மின் விநியோக நிறுவனங்கள், தாமதக் கட்டணம் என்ற பேரில் 18 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் உரிமையை அரசிடம் வாங்கியிருக்கின்றன. ஆனால் ​​அதே நிறுவனங்கள் தாமதக் கட்டணத்துக்காக 12 சதவிகிதத்தை மட்டும் டெல்லி அரசுக்கு ஏன் செலுத்தின?

பா.ஜ.க எம்.பி சுதன்ஷு திரிவேதி

இந்த 6 சதவிகித லாபம் எங்கே போனது? ஒரு அனுமானத்தின்படி, கடந்த சில ஆண்டுகளில் இதன் மூலம் சுமார் ரூ.8,000 கோடி வரை லாபம் ஈட்டப்பட்டதாக தெரியவருகிறது. இதுமட்டுமல்லாமல், தனியார் மின் விநியோக நிறுவனங்களின் ரூ.3,200 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக அரசு அதிகாரிகள் மின்வாரிய நிறுவனங்களின் வாரியங்களுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். முதன்முறையாக கெஜ்ரிவால் அரசு, ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு அலுவலகப் பணியாளர்களையும், அதன் எம்.பி-யின் ஒரு மகனையும் மின் விநியோக நிறுவனத்தின் வாரியங்களுக்கு பரிந்துரைத்திருக்கிறது.

இதற்குப் பின்னால் உள்ள ஆம் ஆத்மியின் நோக்கம் என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்கம் ஏன் இதைச் செய்தது, அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என இன்றுவரை யாராலும் பதிலளிக்க முடியவில்லை. மத்திய அரசைப் போல நேரடி ஆதாயத்தின் மூலம் டெல்லி குடிமக்களுக்கு ஏன் மின்சார மானியம் வழங்கப்படவில்லை, ஏன் இடைத்தரகர்கள் கொண்டு வரப்பட்டனர்? இடைத்தரகர்களுக்கு லாபம் தருவதே இதன் உள்நோக்கம்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தக் குற்றச்சாட்டுக்கு குஜராத் மக்களிடம் உரையாற்றும்போது பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மியின் இலவச மின்சாரம் பற்றிய யோசனையை, தேசிய தலைநகரில் மின்சார மானியத் திட்டத்தைத் தடுக்கவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.