நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியின் புகைப்படத்துடன் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் ஹரிஷ் கல்யாண், 2010இல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார்.
ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அவர் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள் அதே போலவே இப்போது தங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைங்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள். குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கன்/பத்திரிக்கை நண்பர்கள்.
எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்கைப் பயணத்தைத் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in