கனிமொழிக்கு திமுகவில் பெரிய பதவி… இன்னும் 4 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணைப் பொதுச் செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில்

தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து இவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்பப் போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்த விவகாரம்

உடன்பிறப்புகளிடம் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் கட்சி விதிகளின் படி, துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தான். எனவே அந்த பதவியை அலங்கரிக்கப் போகும் அடுத்த பெண் யார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நின்றது.

தெற்கில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், இல்லை கொங்கு மண்டலத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து நான்கைந்து பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன. ஆனால் அனைவரையும் ஓரங்கட்டி விட்டு கனிமொழியின் பெயர் லிஸ்டில் முன்னிலை பெற்றிருக்கிறது. இவர் தற்போது திமுக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி மக்களவை தொகுதி ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.

சமீபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் தலைவராக கனிமொழியை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தான் புதிதாக ஒரு பொறுப்பு கனிமொழியை தேடி வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 9ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்

என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகப் போவதாக தெரியவந்துள்ளது.

திமுகவை பொறுத்தவரை பொதுவாக பெண்கள் ஓட்டு அதிகம் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. தற்போது கூட இலவசப் பேருந்து பயண திட்டம் குறித்த அமைச்சர்களின் பேச்சால் பெண்களின் அதிருப்தியை திமுக சம்பாதித்து கொண்டது. எனவே கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதின் மூலம் பெண்களை கவர முடியும். பெண் வாக்காளர்களை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறது திமுக தலைமை.

அதுமட்டுமின்றி தூத்துக்குடியில் மட்டுமே அரசியல் செய்யும் அளவிற்கு கனிமொழியை ஓரங்கட்டி வைத்திருப்பதாக விமர்சனம் நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் பெண்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்குமா? கட்சியின் மகளிர் அணி மேலும் எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.