கை கொடுத்த துர்கா ஸ்டாலின்; ஸ்டாலின் ஹேப்பியோ ஹேப்பி!

தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக

செயல்படுவதாக அர்ஜூன் சம்பத், எச்.ராஜா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய கருத்துகள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதால் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்பது போன்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பொறுத்தவரை மத நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட குடும்பத்தில் உள்ள பலர் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள்.

அதுமட்டுமல்லாமல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மூத்த நிா்வாகி ஜெகத்ரட்சகன் எம்.பி உள்பட பலர் இறை நம்பிக்கையை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.

அப்படி இருக்கையில் இந்து மதத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக கிளப்பிவிடப்பட்ட வதந்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வெகுவாக பாதித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான் இந்து சமய அறநிலைய துறை சார்பில், வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பு தபால் உறை, லோகா, சிறப்பு மலர் ஆகியவற்றை தமிழக

பேசியதாவது:

அமைச்சர் சேகர்பாபு ஆன்மிக செயற்பாட்டாளர். அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதை விட அதிகமாக கோயிலுக்கு செல்கிறார். கோயில்களில் நடைபெறும் அறப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்.

வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை. வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது.

பசி பிணியை தடுத்த வள்ளலாரின் வழியில் நடக்கும் திமுக அரசு பள்ளிகளில், காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது.

சமூக நல்லிணக்கம் வேண்டும். திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என சிலர் பரப்பி வருகிறார்கள். திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல.

தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும் உயர்வு தாழ்வை கற்பிக்க மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு எதிரானது இந்த, ‘திராவிட மாடல் திமுக ஆட்சி’.

மதத்தை வைத்து, பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு வதந்தி பரப்புவோருக்கு கொடுத்துள்ள தக்க சவுக்கடியாக பார்க்கப்படுகிறது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்துள்ளது திமுகவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் மூலம் கணவருக்கு அல்லது அவர் சார்ந்திருக்கிற கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கும் விதமாக கை கொடுத்துள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக வட்டாரமும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.