மும்பை, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தாரை கொலை செய்யப் போவதாக, கடந்த ஆக., 15ல் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் நேற்று அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும், முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீட்டா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிஉள்ளார்.அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வந்த இந்த அழைப்பு குறித்து, மும்பை போலீசார் விசாரிக்கின்றனர்.பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு, ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பாக உயர்த்தப் பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement