பிஞ்சு குழந்தையுடன் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய பின்னணி


கடத்தப்பட்ட அந்த குடும்பம் பற்றிய தகவல் தெரியவந்தால் உதவ முன்வாருங்கள்

8 மாத பெண் குழந்தை உட்பட நான்கு பேர்கள் கொண்ட குடும்பம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

அமெரிக்காவில் நான்கு பேர்கள் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் மாயமான விவகாரத்தில் இன்னொருவர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்த உறவினர்கள், கடத்தப்பட்ட அந்த குடும்பம் பற்றிய தகவல் தெரியவந்தால் உதவ முன்வாருங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

பிஞ்சு குழந்தையுடன் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய பின்னணி | Indian Family Abduction Suspect Accomplice

@reuters

Merced County யில் உள்ள அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரான ஜீசஸ் மானுவல் சல்காடோவுடன் பேச முயன்று, இந்த விவகாரத்தில் இன்னொரு நபர் ஈடுபட்டுள்ளாரா என்பதைத் தீர்மானிக்க முயன்று வருவதாக ஷெரிப் வெர்னான் வார்ன்கே கூறியுள்ளார்.

ஜீசஸ் மானுவல் சல்காடோவுடன் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்காத வரையில், நூறு சதவீதம் உறுதி கூற முடியாது என ஷெரிப் வெர்னான் வார்ன்கே தெரிவித்துள்ளார்.

48 வயதான ஜீசஸ் மானுவல் தற்கொலைக்கு முயன்ற நிலையிலேயே பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
மாயமானதாக கூறப்படும் குடும்பத்தை கடத்தி சென்றிருக்கலாம் என்றே தாம் நம்புவதாகவும், ஆனால் அதை உறுதி செய்ய தங்களிடம் தற்போது போதுமான தரவுகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிஞ்சு குழந்தையுடன் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய பின்னணி | Indian Family Abduction Suspect Accomplice

@reuters

8 மாத பெண் குழந்தை உட்பட நான்கு பேர்கள் கொண்ட குடும்பம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
சான் ஜோஸுக்கு கிழக்கே சுமார் 150 மைல் தொலைவில் உள்ள மெர்சிடில் உள்ள இவர்களது டிரக்கிங் நிறுவனத்தில் இருந்து திங்கள்கிழமை காலை நான்கு பேரும் கடத்தப்பட்டனர்.

27 வயதான ஜஸ்லீன் கவுர், இவரது கணவர் 36 வயதான ஜஸ்தீப் சிங் மற்றும் குழந்தை அரூஹி தேரியின் மாமா, 39 வயதான அமந்தீப் சிங் ஆகியோரே மாயமானவர்கள்.

இச்சம்பவத்தில் குடும்பம் மொத்தம் நொறுங்கிப் போயுள்ளதாகவும், ஒவ்வொரு நொடியும் செத்துப் பிழைப்பதாகவும் உறவினரான பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் எவருக்கேனும் சிறு தகவல் கிடைத்தாலும், கண்டிப்பாக பொலிசாருக்கு உதவுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.