வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்-போர் நடந்து வரும் உக்ரைனில் இருக்கும் தன் வளர்ப்பு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை மீட்க உதவும்படி, மத்திய அரசுக்கு, ஆந்திராவை பூர்வீகமாக உடைய டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர் தற்போதும் நீடித்து வருகிறது.போர் துவங்கியபோது, உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது, டாக்டர் கிதிகுமார் பாட்டீல் என்பவர் மற்றொரு ஐரோப்பிய நாடான போலந்தில் தஞ்சமடைந்தார். ஆந்திராவின் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த இவர், உக்ரைனின் குடியுரிமையைப் பெற்று உள்ளார்.லுஹான்ஸ்க் நகரில் இருந்து வெளியேறும்போது, தன்னுடைய வளர்ப்பு பிராணிகளான சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையையும் உடன் அழைத்துச் செல்ல அவர் அனுமதி கேட்டார். ஆனால், அது மறுக்கப்பட்டது.
இதையடுத்து, உக்ரைனைச் சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் இந்த சிறுத்தைகள் உள்ளன.செல்லப் பிராணிகளை பிரிந்ததால் மன ரீதியில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement