கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்காஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும் பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்தும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 45 படுகாயமடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவி, மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள், இரண்டு ஊழியர்கள் என 51 பேர் சென்று கொண்டிருந்தனர்.
இரவு 12 மணியளவில் பாலக்காடு வடக்காஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது கொட்டாரக்கரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தின் பின்பக்கமாக அதிவேகமாக சென்ற சுற்றுலா பேருந்து மோதியதில் சுற்றுலா பேருந்து கவிழந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பள்ளி மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தில் 10 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆலத்தூர், வடகஞ்சேரி பகுதகளிலிருந்து சென்ற தீயணைப்பு படை வீர்ரகள், பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலாப் பேருந்து அதிவேகமாகச் சென்றதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக விபத்து நிகழ்ந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.