2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்தின் கீழ் நேற்று முதல் (05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்த Green Cardடுக்கான விண்ணப்பிப்பங்கள் இணைய தளத்தின் ஊடாக நேற்று (5) இரவு 09.30 மணி முதல் நவம்பர் 08 ஆம் திகதி இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளமான https://dvprogram.state.gov வழியாகச் சமர்ப்பிக்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விசா திட்டம் 2024 கான On Line மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் எவ்வித பத்திரங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் 50 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தர வதிவிடங்களை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.