காதல் விவகாரம்; பாபநாசம் பட பாணியில் கொலைசெய்து சாட்சியங்களை அழித்த மாணவன் சிக்கியது எப்படி?!

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியிலிருக்கும் எம்.எஸ் பல்கலைக்கழகத்தில், பி.காம் படித்துவந்தார்கள் 19 வயதான மேத்தா பட்டேலும் அவரின் நெருங்கிய நண்பரான பாபு கோத்தாரியும். இவர்கள் இருவருடனும் அங்குப் படிக்கும் இளம்பெண் ஒருவர் நட்பாக பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், பாபு கோத்தாரி அந்தப் பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணுடன் மேத்தா பட்டேல் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை பாபு கோத்தாரி, மேத்தா பட்டேலை எச்சரித்தும் அவர் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், அவரைக் கொலைசெய்ய பாபு கோத்தாரி முடிவுசெய்து… கடந்த வெள்ளிக்கிழமை அவரை தந்திரமாகப் பேசி அழைத்துச் சென்று கொலைசெய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை பாபு கோத்தாரியை கைதுசெய்திருக்கிறது.

கொலை

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக ஊடங்களிடம் பேசிய காவல்துறையினர், “இருவரும் நண்பர்கள் என்றாலும், பாபு கோத்தாரி மேத்தா பட்டேலைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்கு முன்னேற்பாடக, கொலைசெய்த பிறகு போலீஸிடமிருந்து எப்படி தப்பிப்பது? காணாமல் போனவர்களை காவல்துறை எவ்வாறு தேடுகிறது? இந்தியாவில் கொலைசெய்ததற்கான தண்டனை என்ன? காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை செல்போன் அழைப்பு விவரப் பதிவை (சிடிஆர்) எப்படிப் பயன்படுத்துகிறது? அழைப்புப் பதிவுகளை எப்படிப் பெறுகிறார்கள்? கொலை ஆயுதத்தை எப்படி அப்புறப்படுத்துவது? உள்ளிட்ட தகவல்களை யூடியூபில் தேடி தெரிந்துகொண்டிருக்கிறார். அதற்கேற்றவாறு திட்டமிட்டிருக்கிறார்.

காவல்துறை

இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த திங்கள்கிழமை இரவு சந்திக்க முடிவுசெய்திருக்கிறார்கள். பாபு பட்டேல் தன்னுடன் கத்தி, கயிறை எடுத்துச் சென்றிருக்கிறார். அதை வைத்து கடத்தல்காரர்களை போல இனஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யலாம். அது நிறைய லைக்-களை பெற்றுத்தரும் எனக் கூறி மேத்தா பட்டேலை அழைத்துச் சென்றிருக்கிறார். அலங்கார் வணிக வளாகத்தின் அடித்தளத்துக்கு அழைத்துச் சென்று, யதார்த்தமான கடத்தல் நாடகத்துக்காக மேத்தாவின் கை மற்றும் கால்களை கட்டுவதாகக் கூறி, அவரிடம் சம்மதம் பெற்று கட்டியிருக்கிறார். அதன்பிறகு கொடூரமாக குத்திக் கொலைசெய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்.

கொலை

காவல்துறை கவனத்தை திசை திருப்ப அங்கிருந்து மேத்தா பட்டேலின் செல்போனை எடுத்துச் சென்று பல இடங்களில் சுற்றியிருக்கிறார். கொலைசெய்த கத்தியை முஜ்மஹுதாவுக்கு அருகிலுள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் போட்டுவிட்டு சிம் கார்டையும் தூக்கிப்போட்டிருக்கிறார். அதன்பிறகு அவர் வீட்டுக்குச் சென்று எதுவும் நடக்காதது போல தூங்கிவிட்டார்.

இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராத மேத்தா பட்டேல் குறித்து அவர் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தொடங்கியபோது சிசிடிவி-யில் மேத்தா பட்டேல், பாபு கோத்தாரியுடன் சென்றது பதிவாகியிருந்தது.

கைது

அது தொடர்பாக விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என பாபு கோத்தாரி கூறியதைத் தொடர்ந்து, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதன்பிறகு பாபு கோத்தாரி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். விசாரணையில் தன் சகோதரியைப் பற்றி அநாகரிகமான செய்திகளை பரப்பியதால்தான் மேத்தா பட்டேலைக் கொன்றதாக தெரிவித்திருக்கிறார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.