சுவிட்சர்லாந்தில் நாடுகடத்தப்பட இருந்த வெளிநாட்டவர் ஒருவர் பொலிசாரிடமிருந்து தப்பியோடினார்.
அவரை யாராவது பார்த்தால், அவரை நெருங்கவேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில், சிறையிலிருந்து தப்பிய, நாடுகடத்தப்பட இருந்த வெளிநாட்டவர் ஒருவரை, நாடு முழுவதும் தேடப்படும் நபராக பொலிசார் அறிவித்துள்ளார்கள்.
அந்த 34 வயது நபர், Aargau மாகாணத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்காக வேனில் கொண்டு செல்லப்படும்போது தப்பியோடிவிட்டார்.
image- Armin T – Kapo AG
தாக்குதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் போதைக்குற்றங்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.
பெரும்பாலும் பெண்களை மோசமாக தாக்கக்கூடிய அந்த நபர் மீது அவரது மனைவியையும் தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
27 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றிருந்த அவரது தண்டனைக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், அவரது தண்டனையின் இரண்டாவது பாகமான நாடுகடத்தலை எதிர்த்து வழக்கு தொடர்வதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருந்தார்.
அந்த நபர் துனிசியா நாட்டவராவார்.
கையில் விலங்குடன் ரயிலில் பொலிசாரால் அழைத்துவரப்பட்டபோது Aarau ரயில் நிலையத்தில் அவர் மெல்ல பொலிசாரின் பிடியிலிருந்து நழுவித் தப்பிவிட்டார்.
அவரை யாராவது பார்த்தால், அவரை நெருங்கவேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.