அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்த நாயை, பாபி – ஜூலி என்ற தம்பதி பெப்பிள்ஸ் என பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர்.
உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக 21 வயதான டோபி கெய்த் என்ற நாய் அறிவிக்கப்பட்டபோது, பாபி – ஜூலி தம்பதி தங்களது நாய் அதை விட அதிக வயதுடையது என்பதால், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தனர்.
மேலும் படிக்க | Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!
இதனைத் தொடர்ந்து, உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக பெப்பிள்ஸ் அறிவிக்கப்பட்டது. 23 வயது ஆவதற்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், பெப்பிள்ஸ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. பெப்பிள்ஸ் கிராமிய இசையை விரும்பி ரசித்ததாகவும், தங்கள் குடும்பத்தில் மிக செல்லமாக வளர்ந்ததாகவும், அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெப்பிள்ஸ் தன் வாழ்நாளில் 32 குட்டிகளை ஈன்றுள்ளது.
மேலும் படிக்க | இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ