அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, இபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி எதிர்தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் லஞ்சஒழிப்புத்துறை சோதனைகளுக்கு பின்னால் ஓபிஎஸ் இருப்பதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல், குற்றச்சாட்டுகள் இல்லையென்று மாஜி அமைச்சர்கள் நிரூபிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக திமுக தரப்போடு ரகசிய பேரம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் யார் என்ற பட்டியலை விரைவில் நாங்கள் அம்பலப்படுத்துவோம் என தெரிவித்தார்.
அந்த நவம்பர் 21ஆம் தேதிக்கு முன்பாகவே வெளிக்கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு எச்சரிக்கை விடுத்த அவர், ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அவரது இந்த பேட்டி மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜேசிடி பிரபாகர் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்’ என்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.