RRR படத்திற்காக ஆஸ்கர் விருது பெற முயலும் ராஜமௌலி – பல்வேறு விருதுகளுக்குப் படத்தை அனுப்ப முடிவு!

அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 95-வது அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் நடக்க இருக்கிறது.

இதற்காக சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராக்கெட்ரி’ போன்ற படங்கள் தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலர் ‘RRR’ படத்தை சிலாகித்துப் பேசிய நிலையில், நிச்சயம் இந்தியா சார்பாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் குஜராத்தித் திரைப்படமான ‘Chhello Show’ (The Last Film Show) இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

For your consideration (FYC); ‘RRR’ திரைப்படம் விண்ணப்பித்துள்ள பட்டியல்

இதனால் ஸ்பெஷல் என்ட்ரியாக தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி ‘RRR’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெறச் செய்யத் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார் ராஜமௌலி. இதற்காக ‘For your consideration (FYC)’ என்ற விளம்பர யுக்தி மூலம் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு ‘RRR’ திரைப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார். மேலும் இதன் மூலம் இப்படத்தை சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ராஜமௌலி), சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்), சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்), சிறந்த துணை நடிகை (அலியா பாட்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம், சிறந்த பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த ஆடை வடிவமைப்பு, உள்ளிட்ட மொத்தம் 15 பிரிவுகளில் விண்ணப்பித்துள்ளார்.

இதேபோல் இயக்குநர் பார்த்திபனும் ‘இரவின் நிழல்’ படத்திற்காக ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.