SSC CGL Exams 2022: தமிழ் எங்கே? கொந்தளித்த திமுக எம்.பி கனிமொழி!

மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கு SSC எனப்படும் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்விற்கு CGL என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையிலான தேர்வு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் பி பிரிவில் பல்வேறு துறைகளுக்கான Assistant அல்லது Executive Assistant பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30.

இது Pay Level 8 முதல் பல்வேறு மட்டங்களில் சம்பளம் பெறுவோருக்கான அறிவிப்பாக அமைந்துள்ளது. இதில் Tier-II அளவிலான தேர்வில் அப்ஜக்டிவ் டைப், மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இடம்பெறும். கேள்விகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி இருக்கிறது.

ஏனெனில் பிராந்திய மொழிகளில் கேள்விகள் இடம்பெற வேண்டும் என்று பல்வேறு மாநில மக்களும் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதில் முதன்மையானதாக தமிழகம் இருந்து வருகிறது. தற்போதும் தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. நரேந்திர மோடி என்ன இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் பிரதமரா?

தென்னிந்தியாவை புறக்கணிப்பதையே அவரும், அவருடைய கட்சியும் வாடிக்கையாக வைத்திருக்கிறதா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒருவர், மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் தான் அலுவல் பணிகள், கோப்புகள் ஆகியவற்றை கையாள வேண்டியிருக்கும்.

அதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட மொழிகளில் போதிய அறிவு பெற்றிருந்தால் போதும் என்பது போல் அறிவிப்பு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு, அதெப்படி நாட்டிலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களும் இருமொழிகளில் மட்டும் தான் இயங்கும் என்று எதிர்பார்க்க முடியும் என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்நிலையில்
திமுக
எம்.பி
கனிமொழி
தனது ட்விட்டரில், பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை ஆனது அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.