ராஜஸ்தானில், துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆறு பேர், குட்டையில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நந்த்லா கிராமத்தில் துர்கா பூஜை நடைபெற்றது. இதையடுத்து, துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, அங்குள்ள ஒரு குட்டையில் சிலையை கரைக்க இறங்கிய ஆறு இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.”மழை நீர் தேங்கிய இந்த குட்டையில் உள்ளூர் மக்கள் அடிக்கடி சிலையை கரைப்பது வழக்கம்.
ஆனால், இந்த முறை குட்டையின் ஆழம் அவர்களுக்கு தெரியவில்லை. சிலையை கரைக்கச் சென்று மூழ்கிய ஆறு இளைஞர்களில், ஐந்து பேர் உடல்கள் முதலில் மீட்கப்பட்டன. பின்னர், தீவிரமாக தேடி ஆறாவது இளைஞரின் உடல் மீட்கப்பட்டது, ” என, அஜ்மீர் போலீஸ் எஸ்.பி., சுனா ராம் ஜாத் தெரிவித்தார்.
ராஜஸ்தானில், துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆறு பேர், குட்டையில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்