புதுடெல்லி : இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் ஒதுங்கி நின்றது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலில் நேற்று வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 47 உறுப்பு நாடுகள் உள்ள இந்த கவுன்சிலில், 20 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றன. இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்ற இந்தியா, இலங்கை தமிழர்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ற இலங்கை அரசுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.