அடுத்த மாதம் முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஏர் இந்தியா விமானங்களில் மட்டுமே செல்லப்பிராணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகாசா ஏர் என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இருந்து ‘ஆகாசா ஏர்’ விமானங்களில், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.