பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம்| Dinamalar

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அட்டோக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்ட பெண்களை, சிறை பணியாளர்கள் பலாத்காரம் செய்துள்ளனர் என மாநில உளவு துறை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.அட்டோக் சிறையில் போதை பொருள் பயன்பாடும் அதிகமாக உள்ளது. மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிகமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் சிறையில் வலம் வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றிய அறிக்கை ஒன்றை உளவு மையத்தின் பணியாளர், சிறைகளுக்கான ஐ.ஜி., மிர்சா ஷாகித் சலீம் பெய்க்கிடம் ஒப்படைத்து உள்ளார். கைதிகளை பார்க்க வரும் பெண்களை சில சிறை பணியாளர்களே பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர் என சிறை பணியாளர் ஒருவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், பஞ்சாப் நிர்வாகத்தின் கையாலாகாத செயல்பாட்டின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்துள்ளதுடன், வருங்காலத்தில் அவதுாறுக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.கூடுதல் செயலாளர் மட்டத்திலான உயரதிகாரி தலைமையிலான கமிட்டி இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும்படியும், உளவு துறை ஊழியர் வலியுறுத்தி உள்ளார். இதுதவிர, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறையில் கைதி ஒருவரை சந்திப்பதற்கு வரும் ஒரு சிறுமி, கைதிகளுக்கு போதை பொருட்களை வினியோகித்து வருகிறார் என்றும் அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது. இதன்படி, சிறைக்கு வெளியே, ரூ.500-க்கு விற்கப்படும் சாராய பாக்கெட்டுகள் சிறைக்குள்ளேயே ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை விற்கப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.