”பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர் நன்றாக படிக்க முடியாதா?”- நீதிபதி கேள்வி

தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வழக்கு விசாரணையில் முக்கிய கருத்தை மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, அதிலிருந்து மீண்டு வர பல காலமாகும். அதை மறக்கும் வரை அந்த சிறுமி இயல்பாக நடந்துகொள்ள முடியாது, படிப்பில் கவனம் செலுத்த முடியாது என நினைக்கக் கூடாது” என முப்பை உயர்நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது.
சவுதியில் கப்பல் ஊழியராக பணிபுரிபவர், விடுமுறையில் மும்பையில் இருக்கும் தனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் அந்த நபர் வீட்டிற்கு வரும்போதெல்லாம், அவரை தவிர்த்துவிட்டுத் தனி அறையிலேயே இருந்துவருவதைக் கவனித்த அந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து விசாரித்த போது, கடந்த ஏழு ஆண்டுகளில் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்பு முப்பை உயர்நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த போது, இவ்வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜெய்ஸ்ரீ ஆர் புலேட், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
image
மேலும் அச்சிறுமியிடம் பெறப்பட்ட விசாரணையை நீதிபதி சுட்டிக்காட்டினார். அதில், ‘ சிறுமிக்கு தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை தொடங்கிய போது என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லை. 9 ம் வகுப்பு படிக்கும் போது தான், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை உணர்ந்திருக்கிறார். அதன்பின், இதை வெளியில் சொன்னால், தன் தந்தை சிறைக்குச் செல்ல நேரும் அதனால் குடும்பத்துக்கு நிதி உதவி கிடைக்காது போன்ற காரணங்கள் அச்சிறுமியை தொடர்ச்சியாக யோசிக்க வைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் சிக்கியிருந்துள்ளார்.’ என்ற குறிப்பிட்ட நீதிபதி, மேலும் 9ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி தனது படிப்பில் சராசரியாக 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வருகிறாள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒவ்வொருவரின் எதிர்வினையும் ஒரே மாதிரியாக இருக்காது. அப்படி இருக்கவும் முடியாது. பாதிக்கபட்டவர்கள் இயல்பாக இருக்கமாட்டார்கள். பள்ளிக்கு வரமாட்டார்கள். சரியாகப் படிக்கமாட்டார்கள் என்ற பொது சிந்தனையில் எல்லாரையும் அணுக கூடாது ” என நீதிபதி  நீதிபதி ஜெய்ஸ்ரீ ஆர் புலேட் தெரிவித்த கருத்து கவனத்தை பெற்றுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.