சென்னை: திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். ,இந்த விவகாரம் தொடர்பாக தமிழகஅரசின் சமுக நலத்துறை அமைத்துள்ள குழுவினர் இன்று அங்கு சென்று விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பூரில் திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட காவலாளி மற்றும் 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் திருப்பூர் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் குழு அறிக்கை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அறிவித்துள்து. அதன்படி, இந்தகுழு இன்று விசாரணையை தொடங்கவுள்ளது .