வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இன்று(அக்.,7) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.
உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியதுமே, ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் சூழலிலும், அமெரிக்க பத்திரங்கள் உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 82.19 ஆக இருந்த நிலையில், இன்று வர்த்தக நேர துவக்கத்தில் மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement