புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற தசரா பேரணி யில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
மக்கள் தொகை பெருக வளங்கள் தேவை. வளங்களை உருவாக்காமல் மக்கள் தொகை மட்டும் அதிகரித்தால் அது நாட்டுக்கு பெரிய சுமையாகிவிடும். மக்கள் தொகையை ஒரு சொத்தாக கருதும் மற்றொரு பார்வை நம் நாட்டில் உள்ளது.
இந்த 2 அம்சங்களையும் மனதில் வைத்து அனைவருக்கும் பொருத்தமான மக்கள் தொகைக் கொள்கையைக் கொண்டு வர வேண்டும். அதாவது, அனைத்து சமூகங்களுக்கும் சமமாகப் பொருந்தக் கூடிய பரந்த மக்கள்தொகைக் கொள்கை உருவாக்கப்படவேண்டும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது புறக்கணிக்கக் கூடாத ஒரு முக்கிய விஷயமாகும்.
இந்து என்ற வார்த்தையை சிலர் எதிர்க்கின்றனர், வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். கருத்து தெளிவுக்காக, இந்து என்ற சொல்லை வலியுறுத்திக் கொண்டே இருப்போம். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.