திருவனந்தபுரம்: பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா செய்யப்பட்டுள்ளதகா தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆணைகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். இவருக்கு தென்மாவட்டங்களில் ஏராளமான தொண்டர்கள் உண்டு. கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குலம் என்ற கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று திருவனந்த விமான நிலையத்தை வைத்து ராக்கெட் ராஜாவை நெல்லை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
ராகெட்ராஜாவின் சொந்த ஊர் நாங்குநேரி என்றாலும் அவர் மும்பையில் வாழ்ந்துவருகிறார். இதனால் அவர் மும்பையில் இருந்து வரும் பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் சம்பவம் நடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதியே முன் விரோதம் காரணமாக தாங்கள் வெட்டி கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் நடுநந்தன்குளம் என்ற பகுதியை சேர்ந்த விக்டர் என்ற இளைஞரும், நெல்லை மாவட்டம் கோவைசெரியை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இருப்பினும் காவல்துறையினர் விசாரணையில் ராக்கெட்ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 12.30 மணியளவில் கைது செய்த போலீசார் நாங்குநேரிக்கு அழைத்து வருகின்றனர். பலத்த பாதுகாப்புடன் ராக்கெட் ராஜா நாங்குநேரிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.