அடுத்தது யார்? – பரிந்துரையை அனுப்புமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அரசு கடிதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்தது அப்பதவியில் அமரப் போகும் நபரை பரிந்துரைக்குமாறு அவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த அவர், 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி ஆனார். இந்நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ஆகஸ்ட் 27 தொடங்கி 74 நாட்களுக்கு மட்டுமே அவர் பதவிக்காலம் நீடிக்கும் என்பதால் அடுத்த பரிந்துரை கோரி அவருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரை வெளியாகிவிட்டால், நடைமுறையின்படி நீதிபதிகளைத் தேர்வு செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடத் தேவையில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.