கிரிக்கெட் விளையாடிய ஜான்வி; வைத்து செய்த நெட்டிசன்கள் – வீடியோ இதோ…!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் ஜோடியின் மூத்த மகள் ஜோன்வி கபூர். 25 வயதான ஜான்வி கபூர் 2018ஆம் ஆண்டு வெளியான ‘தாடக்’ எனும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா, ரூஹி, குட் லக் ஜெரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும், அவரது மனைவி சாக்ஷி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘Mr. & Mrs. Mahi’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். குஞ்சன் சக்சேனா படத்தை இயக்கிய சரண் ஷர்மா இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார். 

‘டென்னிஸ் பாலுக்கு இவ்வளவு…’

அந்த வகையில், ஜான்வி கபூர் ‘Mr. & Mrs. Mahi’ திரைப்படத்திற்காக கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் வலைப்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியானது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து, நகைப்புக்குள்ளாக்கியுள்ளனர். 

அதில், ஒருவர் அந்த வீடியோவை பகிர்ந்துவிட்டு,”வரும் உலகக்கோப்பைக்கான ஒற்றை நம்பிக்கை” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அதற்கு மற்றொருவர்,”டென்னிஸ் பந்துக்கு எதற்கு கையில் கிளவுஸ், காலில் பேட் எல்லாம்…” என கிண்டலடித்துள்ளார். தொடர்ந்து இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

ஜான்வி கபூர் குறைந்த அளவிலான திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அவரின் போட்டோசூட்கள், பேட்டிகள் மூலம் பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 1 கோடியே 87 லட்சம் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.