17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை – காரணம் இதுதான்!

தற்போது, சைக்கோ கொலைக்காரர்கள் தான் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். இதற்கு, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சீரியல் கில்லர்கள் குறித்த வெப்-சீரிஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்தான் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. மேலும், இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் டிஆர்பி எகுறுகின்றன.  

இதுபோன்ற டிரெண்ட்கள் நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, சைக்கோ கொலைக்காரர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், அதுகுறித்த பொருள்களை வாங்கவும் லட்சக்கணக்காணோர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர். 

அந்த வகையில், அமெரிக்க சைக்கோ கொலைக்காரனான ஜெஃப்ரி டாஹ்மரின் கண் கண்ணாடி, சுமார் 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. கனடாவை சேர்ந்த டெய்லர் ஜேம்ஸ் எனும் பழம்பொருள் சேமிப்பாளர் ஒருவர் அந்த கண்ணாடியை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த கண்ணாடி உள்பட கொலைக்காரன் டாஹ்மரின் பயன்படுத்திய ஸ்பூன், ஃபோர்க் போன்ற உபகரணங்கள், அவரின் பைபிள், குடும்ப புகைப்படங்கள், சில காகிதங்கள் ஆகியவற்றை டாஹ்மரின் தந்தையிடம் வேலைப்பார்த்த பணியாளர் ஒருவரிடம் இருந்து வாங்கியுள்ளார். 

மேலும் படிக்க | ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து… ஆபத்தில் முடிந்த காரியம் – வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

இந்த பொருள்களுக்கான மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், அவற்றை சேமித்தும், மற்றவர்களுக்கு விற்றும் வருகிறார். இதற்கெல்லாம், முதன்மையான காரணம் நெட்பிளிக்ஸில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான ‘மான்ஸ்டர்’ வெப்சீரீஸால் தான்.  ஜெஃப்ரி டாஹ்மர் குறித்த இந்த வெப்சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தாலும், பெரும்பாலும் எதிர்மறை எண்ணைத்தை தான் இந்த தொடர் தூண்டுகிறது என விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடர் குறித்து பேசிய டாஹ்மரின் 19 வயது சகோதரி, இந்த நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸின் தொடக்க அத்தியாயங்களை பார்த்தேன். அதில், என்னை போன்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தையும் பார்த்தேன். என்னைப்போன்ற தலைமுடியையும், ஆடையும் அந்த கதாபாத்திரம் வைத்துள்ளது. அதை பார்க்கும்போது, எனது கடந்தகாலம் எண்ணங்கள் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்துகிறது. 

இந்த வெப்சீரிஸை எடுப்பதால் எனக்கு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்று கூட நெட்பிளிக்ஸ் என்னிடம் கேட்கவில்லை. வெறும் பணம் குவிக்கும் வழிமுறையாக இந்த தொடரை நெட்பிளிக்ஸ் எடுத்துள்ளது” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

1978 – 1991 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜெஃப்ரி டாஹ்மர், கருப்பு, மாநிறத்திலான ஆண்கள், சிறுவன்கள் என மொத்தம் 17 பேரை கொலை செய்துள்ளார். ஓரின ஈர்ப்பாளரான இவர், அதற்கு எதிராக இருந்தவர்களையும் கொலைசெய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Video: ஆடையின்றி வந்த பிரபல மாடல்… மிரண்ட பார்வையாளர்கள் – இனி இப்படிதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.