யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு நேற்று (06) ஆரம்பமானது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் தற்போது இடம்பெறுகின்றது.
எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2,378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.