"இந்து மதமே இல்லை" வெற்றி மாறன், கமல்ஹாசன் கருத்துக்கு இணை அமைச்சர் எல்.முருகன் பதில்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்று கூறி தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க தமிழகத்தில் சிலர் முயற்சிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு. மேலும் தமிழர்களும், இந்துக்களும் ஒன்று தான். ஆங்கிலேயர்கள் வரலாற்றை திருத்தி பொய்யான வரலாற்றை கூறியதாகவும் விமர்சித்துள்ளார். 

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று நீலகிரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியளார்களை சந்தித்த அவர் தமிழகத்தில் பா.ஜ.க. தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது என்றார். 

அப்போது ராஜ ராஜ சோழன் காலத்தில் “இந்து மதம் என்பதே இல்லை” என்றும் ஆங்கிலேயர்கள் தான் இந்து என்று பெயர் வைத்துள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் கூறி இருப்பது குறித்து கேட்ட போது, ஆங்கிலேயர்கள் வரலாற்றை திருத்தி பொய்யான வரலாற்றை கூறியுள்ளதாகவும், அதற்கு பின் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வரலாறை திருத்தியதாகவும் குற்றம் சாட்டினார். தற்போது தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும் அது நடக்காது என்றார். மேலும் தொடர்து பேசிய அவர், “தமிழகம் ஒரு ஆன்மீக பூமி” என்றும், தமிழர்களும் இந்துக்களும் ஒன்று தான் என்றார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக 95 சதவீத பூர்வாங்கு பணிகள் மட்டும் தான் முடிந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்ததாகவும், ஆனால் அதை  வலைதளங்களில் சர்ச்சை பொருளாக்கியது அரசியல் அநாகரீகம் என்றார். தமிழகத்திற்கு 390 நடமாடும் கால்நடை மருத்துவமனைகளுக்கு முழுமையாக 100 சதவீதம் நிதி ஒதுக்கி 6 மாத காலமாகியும் தமிழக அரசு இதுவரை அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டினார். 

மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு தான் தாமதம் செய்வதாகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் முடிவதற்குள் கட்சி இருக்குமா என்பது சந்தேகமாக இருப்பதாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.