வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டம், தாமோக் ரயில் நிலையத்திற்கு ரிவான்ஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரு எம்.எல்.க்கள் ஏறினர். இருவரும் மது அருந்தியிருந்ததால் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் முன்பதிவு செய்யாத ஏசி வகுப்பில் ஏறியுள்ளனர். ரயில் புறப்பட்டு தாமோக் – கட்னி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் 32 வயது பெண் தனது குழந்தையுடன் தனியாக பயணித்துள்ளார். அவரிடம் இரு எம்.எல்.ஏ.க்களும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தனது கணவருக்கு மொபைல் போன் மூலம் தெரிவித்தார்.
உடன் அப்பெண்ணின் கணவர் ஜபல்பூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே அமைச்சக டுவிட்டரிலும் பதவிவேற்றினார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அடுத்த ரயில் நிலையம் வந்த போது இரு எம்.எல்.ஏ.க்களையும் பிடித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்’ .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement