தமிழ்நாட்டில் இந்து மதநம்பிக்கைக்கு எதிராக
செயல்படுவதாக அர்ஜூன் சம்பத், எச்.ராஜா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சு சர்ச்சைக்கு உள்ளானதால், அதே இந்து அமைப்புகள் மீண்டும் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மத நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே காட்டிக்கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் திமுகவில் உள்ள பெரும்பாலான முன்னணி நிர்வாகிகள் கூட மத நம்பிக்கையை வெளிப்படையாகவேக் காட்டி வருகின்றனர். இதை திமுகவும் பெரிதும் கண்டுகொள்ளாமல் அவரவது விருப்பம் என்ற ரீதியில் விட்டுவிட்டது.
இதையெல்லாம் வைத்து, திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற அவதூறு சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
தொடர்ந்து பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்புகளுக்கு எதிராக பேசியும், செயல்பட்டும் வருகிறார்.
திருமாவளவனின் இந்த செயல்பாடு திமுகவையும் வெகுவாக பாதிப்பதாக திமுக கருதுகிறது. ஒரே நேரத்தில் திமுகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்குவதை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகவே சமீபத்தில், ‘திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது. மக்களுடைய நம்பிக்கைக்கு எதிரானது என, சிலர் பரப்பி வருகின்றனர். திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல’ என பேசி சரிகட்ட வேண்டிய நிலைக்கு ஆளானார்.
இந்த சூடு ஆறுவதற்குள் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ‘ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்’ என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன், ‘வெற்றிமாறன் பெரியாரின் பேரன்’ என அதிரடியாக கூறி மீண்டும் தமிழக அரசை தெறிக்க விட்டார். இதை பலரும் ஆமோதித்த நிலையில் வழக்கம்போல திமுக மவுனம் காத்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீரென தமிழக அரசுக்கு விடுத்து இருக்கும் கோரிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘இந்து சமய அறநிலைய துறையை சைவ, சமய அறநிலையத் துறை மற்றும் வைணவ சமய அறநிலையத் துறை என பெயர் மாற்ற வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
திருமாவளவனின் இந்த கோரிக்கை தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படும் அதே சமயம் திமுக வட்டாரத்தை டென்ஷனாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.