சாரா லீ, பிரபல பொழுதுபோக்கு குத்துச்சண்டையான WWE-இன் முன்னாள் வீராங்கனை. இவருக்கு வயது 30. சாரா லீ 2015, 1016 காலகட்டங்களில் WWE-இல் பங்கேற்று வந்தார். ‘டஃப் எனாஃப்’ ரியாலிட்டி ஷோவில் 2015ஆம் ஆண்டு வெற்றியடைந்தார். மேலும், விளையாட்டு-பொழுதுபோக்கு துறையில் தொடர்ந்து இயங்கி வந்தார்.
இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்ததாக அவரின் தாயார் டெரி லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில்,”எங்களின் சாரா வெஸ்டன் இறைவனடி சேர்ந்தார் என்பதை கனத்த இதயத்துடன் உஙகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம், அதை எங்களால் முழமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
You were so good in so many ways. You loved your family and friends so much. you were so giving, warm and selfless. You made me giggle. No matter how long we went without seeing each other, we would always pick up right where we left. I love you Sara. pic.twitter.com/3VvySbd2AH
— Nikki A.S.H (@WWENikkiASH) October 6, 2022
அவரது மறைவை அடுத்து, சக வீரர், வீராங்கனைகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர். சாரா லீ மறைவு குறித்து WWE தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”சாரா லீ-யின் மறைவை அறிந்து WWE மிகவும் வருத்தமடைகிறது. “டஃப் எனாஃப்” ரியாலிட்டி ஷோவின் முன்னாள் வெற்றியாளரான சார லீ, விளையாட்டு-பொழுதுபோக்கு உலகில் பலருக்கு உத்வேகமாக இருந்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு WWE தனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
WWE is saddened to learn of the passing of Sara Lee. As a former “Tough Enough” winner, Lee served as an inspiration to many in the sports-entertainment world. WWE offers its heartfelt condolences to her family, friends and fans. pic.twitter.com/jtjjnG52n7
— WWE (@WWE) October 7, 2022
சக WWE நட்சத்திரமான வெஸ்டின் பிளேக்கை, சாரா லீ திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சாரா லீ-யின் குடும்பத்திற்கு நிதி அளிப்பதற்கு இணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இணையப்பக்கம் தொடக்கப்பட்டு 12 மணிநேரத்தில் 59 ஆயிரத்து 351 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 49 லட்சம்) நிதி திரப்பட்டுள்ளது. இந்த நிதி, சாரா லீ இறுதிசடங்கிற்கும், மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்குமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உலகின் மிக வயதான நாய் மரணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ