அமைச்சுக்களின் ஊடகச் செயலாளர்களின் முக்கிய பங்கு, அரச அபிவிருத்தி மற்றும் கொள்கைத் தொடர்பிலான விடயங்களை மக்கள் மயப்படுத்துவதில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட, சிங்கள மொழிப் பத்திரிகை லங்காதீபவின் பணிப்பாளரும் பிரதம ஆசிரியருமான ஸ்ரீ ரணசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷக ராமநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட ஊடகத்துறையில் பதவிகளிலிருந்து நாம் மிளிர முடியாது. பதவிகளில் இருக்கும் காலப்பகுதியில் நாம் நாட்டிற்காக நிறைவேற்றக் கூடிய பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். எமது பொறுப்பு அரச அதிகாரிகள் என்ற ரீதியில் இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அவ்வாறு செய்ய முடியாத போது இந்தத் துறையிலிருந்து வெளியேற வேண்டும். இப்பொறுப்பை முன்னெடுக்கக் கூடியவர்களுக்கு வழங்குவதே எனது நிலைப்பாடாகும்.
நாட்டில் கடந்த காலங்களில் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்டன. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் உச்ச கட்டம் கடந்த ஜூன் மாதமாகும். பாராளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் தற்போது இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து முன்னோக்கிப் பயணிக்கிறார். இந்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமகால ஜனாதிபதிக்கு உதவ வேண்டும். அவ்வாறு செயற்படாத போது நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகள் சிரமமானதாக அமையுமென்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட சுட்டிக் காட்டினார்.
விசேடமாக அமைச்சுக்களின் ஊடகச் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது. இன்றைய பிரச்சினைக்கு நாளை பதிலளிப்பதில் எந்தப் பயனுமில்லை. இதனால் எப்பொழுதும் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது பற்றி, அமைச்சுக்கு அல்லது அமைச்சருக்கு அல்லது அரசாங்கத்திற்கு விரைவாக அறிவித்து தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பதில் தாமதமடையுமாயின் உண்மைக்குப் புறம்பான தகவல் கூட உண்மையாகிவிடும். பொது மக்கள் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூட ஏற்றுக்கொள்வார்கள். இந்த நிலையைத் தடுப்பது அமைச்சின் ஊடக செயலாளர்கள் உள்ளிட்டோர்களின் பொறுப்பாகும்.
நாட்டிற்கு உண்மையான தகவல்களை வழங்குவது நீங்களே என்பதை மறந்து விடக்கூடாது என்றும் வெகுஜன ஊடக அமைச்சின்; செயலாளர் அனூஷ பெல்பிட சுட்டிக் காட்டினார்.
அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன உரையாற்றுகையில்:
இராஜாங்க அமைச்சர் கூறுவதை, அரசாங்கம் கூறுவதாக தெரிவித்த போதிலும், ஜனாதிபதி எவ்வாறு கூறிய போதிலும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எதைக் கூறிய போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நான் அர்த்தப்படுத்துவது, அரசாங்க தகவல்; பணிப்பாளர் நாயகம் என்ற ரீதியில் நான் இந்த ஊடக செயலாளர்களைத் தான் அர்த்தப்படுத்துகிறேன்.
ஊடக செயலாளர்களினால் அரசாங்கம் ஒன்று இருக்கின்றது என்பதை முன்னெடுக்க முடியும். அவர்களால் அரசாங்கம் இல்லை என்றும் சுட்டிக்காட்ட முடியும். சில அமைச்சுக்களில் இது காணப்படுகிறது ஆனால் அது சிறையில் காணப்படுவதாகத் தெரிகிறது. இது உயிரற்ற நிலையாகும். சில அமைச்சுக்கள் செயல்திறன் மிக்கவை. சகல அமைச்சுக்களையும் செயல்திறன் மிக்கதாகக் இருப்பதையே நான் காண விரும்புகிறேன். இதன் பொறுப்பு ஊடக செயலாளர்களுக்கே உள்ளது.
ஊடக செயலாளர்களுக்கே திணைக்களத்திற்கும் அமைச்சுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் உயிரூட்ட முடியும். இதனால் உங்களை நான் அரசாங்கம் என்ற ரீதியிலேயே காண்கின்றேன் என்று அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மேலும் கூறினார்.