லாஸ் வேகாஸ்-அமெரிக்காவில், லாஸ் வேகாசில் மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் சிலரை குத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.
மர்ம நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறியதாவது: இங்கு வீதியில் நடனமாடும் சில பெண்கள், அங்கு வந்த சுற்றுலா பயணியருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், தன்னை ஒரு ‘செப்’ என அறிமுகப்படுத்தி, தான் வைத்திருந்த சமையல் கத்தியுடன் அப்பெண்களுடன் புகைப்படம் எடுக்க விரும்பினார். ஆனால், அவர்கள் மறுத்ததால், அந்த நபர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பினார் இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நெவாடா மாகாண போலீசார் கூறியதாவது:லாஸ் வேகாசின் பரபரப்பான சாலை ஒன்றில், மர்ம நபர் ஒருவர் கத்தியால் சிலரை குத்தியுள்ளார். இதில், இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த ஆறு பேரில், மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ‘காசினோ’க்கள், ஹோட்டல்கள் நிறைந்திருக்கும் இப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து வரிசையாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பெரிய கத்தியை கைப்பற்றி குற்றவாளியை கைது செய்தனர். வெளி மாகாணத்தை சேர்ந்த அவரிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement