மும்பை: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. அகமதாபாத் அருகே நேற்று காலை 11.15 மணிக்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, எருமை மாடுகள் மீது மோதியது. இதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த பாகம் பிளாஸ்டிக் ஃபைபரில் தயாரிக்கப்பட்டது. இதனால் ரயில் இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் இந்த ரயில் காந்திநகர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மும்பை புறப்பட்டு சென்றது. அங்கு சேதமடைந்த முன் பகுதி 24 மணி நேரத்துக்குள் மாற்றப்பட்டது.
இந்நிலையில் மறுமார்க்கத்தில் வந்தே பாரத் ரயில் நேற்று காந்திநகரில் இருந்து மும்பை சென்றபோது, ஆனந்த் ரயில் நிலையம் அருகே பசு மாடு மீது மோதியது. இதில் ரயில் முன் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது.