பட்டாசு கொண்டு செல்லத் தடை – மீறினால் 5 ஆண்டு சிறை!!

பண்டிகை காலம் நெருங்கி உள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதே போல் பயணிகள் பலரும் பட்டாசு போன்ற பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.

இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான விளைவுகளுடன் ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். குறிப்பாக ரயில் பயணத்தின்போது பயணிகள் அவர்களது உடமைகளுடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, சிகரெட்டுகள், பட்டாசுகள் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது.

இதையும் மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரும் பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படும் என தெற்கு ரயில்வெ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.