கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

 அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2022 ஒக்டோபர் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலைஊடாகமட்டக்களப்புவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் சிலஇடங்களில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானதுமணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்துஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுவதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலிஊடாக மாத்தறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

மாத்தறையிலிருந்துபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகள் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலிஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள்ஓரளவுகொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.