புடின் தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஆனால், உலகத் தலைவர்களில் ஒருவர் தவிர யாரும் அவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை.
உலகம் முழுவதுமே புடினுக்கு வாழ்த்துச் சொல்ல மறுத்துவிட்ட நிலையில், ஒரே ஒரு நாட்டின் தலைவர் மட்டுமே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியுள்ளார்.
அந்த தலைவர், வட கொரியாவின் ஜனாதிபதியான கிம் ஜாங் உன்தான்!
அமெரிக்காவின் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் நசுக்குவதற்காக புடினை வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார் கிம்.
ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நல்லுறவு வலுவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
பதிலுக்கு புடின் என்ன சொன்னார் என்ற விடயம் வெளியாகவில்லை!
Credit: AP