புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் இந்த அகவிலைப்படி உயர்வானது அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.