வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: தன்னுடைய கட்சியை வழி நடத்தும்படி கேட்டதாக பிரசாந்த் கிஷோர் கூறியது, பொய், அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்:
லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நிதிஷ் குமார் என்னை அழைத்து உதவி கேட்டார். இதனையடுத்து 2015 சட்டசபைத் தேர்தலில் ‘மகாத்பந்தன்’ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற அவருக்கு நான் உதவினேன். இன்று, எனக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு அவருக்கு மன உறுதி உள்ளது.
நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பிறகு இப்போது எனது சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன். தன்னுடைய கட்சியை வழிநடத்தும்படி கேட்டதாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கூறினார். இது பீஹார் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இது குறித்து பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
‘கட்சியில் பதவி வழங்கியதாக, கட்சியை வழிநடத்தக் கேட்டதாக பிரசாந்த் கிஷோர் கூறியது பொய், அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
4-5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை காங்.,சில் இணையச் சொன்னார். ஆனால், அவர் பாஜவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement